அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாள் அன்றுஅவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் . மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் சுத்தமான இந்தியாவை அமைக்க உறுதி மொழி ஏற்றுள்ளனர் . இந்த உறுதிமொழி மூலம் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு வருடத்தில் 100 மணி நேரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர் . இந்தியாவின் பெருவாரியான நகரங்கள் சுத்தமாக இல்லாததால் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தில் இணையுமாறு 9 நபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அவர்கள் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சுத்தப்படுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்து உள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் இந்தியாவை சுத்தப்படுத்த உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மோடியின் இந்த திட்டம் ஒரு அருமையான தேவையான திட்டம் ஆகும்.