மொபைல் ஆப்பரேட்டர்களான ஏர்டெல் ,வாடபோன் மற்றும் ஐடியா தனது 2ஜி இண்டர்நெட் சேவையின் விலையை அதிகபட்சமாக 100 சதவீதம் உயர்த்தியுள்ளது . அதுவும் ஜுன் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் இந்த விலையை உயர்த்தி உள்ளது .
சமீபத்தில் ஏர்டெல் 33 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளது . மற்ற இரண்டு நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் விலையை உயர்த்த் தொடங்கிவிட்டன . இந்த மூன்று நிறுவனங்களும் மொபைல் சேவையில் 57 சதவீத வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது .
இந்த மூன்று நிறுவனங்களும் 155 ரூபாய்கு இருந்த 1 ஜிபி 2ஜி இண்டர்நெட் பேக்கின் விலையை 175 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது . இது போன்று பேக் எதுவும் போடாமல் 10 கேபிக்கு 2 பைசா என்று வசூலித்து வந்த நிறுவனங்கள்
இப்போது 10 கேபிக்கு 4 பைசா வசூலிக்கிறது . அதாவது 100 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளது .