இன்று இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு புரட்சியாக பார்க்கப்படும் ஐ.எஸ்.எல் என்னும் இந்தியன் சுப்பர் லீக் தொடங்க உள்ளது . இந்த லீக்கில் உலக அளவில் பிரபலமான சில கால்பந்து வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர் . அப்படி கலந்து கொள்ள வீரர்களின் பெயர்கள் கீழ் வருமாறு :
1 ) அலெசண்ட்ரோ டெல் பியரோ
இத்தாலியைச் சேர்ந்த இவரின் வயது 39 . டில்லி டயனமோ அணிக்காக ஆட உள்ளார் . இத்தாலி அணிக்காக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார் .
2 ) நிகோலஸ் அனெல்கா :
செல்சி அணி ரசிகர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரியும் . ஸ்டிரைக்காரக ஆடும் இவர் மும்பை சிட்டி அணிக்காக ஆட உள்ளார் . இவர் பல கிளப்களில் ஆடி உள்ளார் . மும்பை இவரது 12 வது கிளப் ஆகும் .
3 ) ராபர்ட் பைரஸ் :
அர்செனல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான இவர் 40 வயதிலும் இன்னும் திறமையுடன் இருக்கிறார் . இவரின் அனுபவம் கோவா அணிக்கு உதவியாக இருக்கும் .
4 ) மார்கோ மாட்டாராசி :
2006 ஆம் ஆண்டு உலக கோப்பை பைனலை பார்த்த யாரும் இவரை மறந்திருக்க முடியாது . ஸிடேனிடம் முட்டு வாங்கியவர் இவர் தான் . இவர் சென்னையின் எப்.சி அணிக்காக ஆட இருக்கிறார் .
5 ) டேவிட் ஜேம்ஸ் :
44 வயதான இவர் கோல் கீப்பர் . இன்னும் தன்னை தாண்டி கோல் போகாது என்பதை கேரள அணிக்காக விளையாடி நிருபீக்க உள்ளார் .
6 ) லுயிஸ் கார்சியா :
ஸ்பெயின் அணியைச் சேர்ந்தவரான இவர் பார்சிலோனா , அத்லெடிகோ மாட்ரிட் , லிவர்பூல் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார் . இவர் இப்போது அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக ஆட உள்ளார் .
7 ) கேப்டிவில்லா
ஸ்பெயின் அணியின் உலக கோப்பை வென்ற டீமில் இவரும் இருந்தார் . இடது பக்கத்தில் டிபண்டராக ஆடும் இவர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்காக ஆட உள்ளார் .
8 ) மைக்கேல் சோப்ரா
இவரது தந்தை ஒரு இந்தியர் . இவர் இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று விரைவாக கோல் அடித்த சப்ஸ்டியுட் என்ற பெருமையைப் பெற்றார் ( 15 விநாடிகள் ) . கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஆட உள்ளார் .
9 ) எலனோ
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த நடுகள வீரர் . மேலும் ப்ரீகிக் மூலம் கோல் அடிப்பதில் வல்லவர் . இவர் சென்னையின் எப்.சி அணிக்காக ஆட உள்ளார் .
10 ) மைக்கேல் சில்வெர்ஸ்டர்
இவர் ஒரு டிபண்டர் . இவரும் சென்னையின் எப்.சி அணிக்காக ஆட உள்ளார்
.