நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை காலமும் கனடா ஒரு அமைதியான பாதுகாப்பான நாடு என்று தான் பல இலட்சம் மக்கள் குடியேறியிருந்தனர்.இதற்காக பெரும் பண மற்றும் பொருட்செலவு செய்துள்ளனர்.ஆனால் இது கேள்விக்குறியாகுமோ?