பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதாக அறிவித்து வியாழக்கிழமை காஷ்மீர் செல்கிறார். இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளான ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள மாநிலத்தில், இந்துப் பண்டிகையான தீபாவளி அன்று மோடி வருவது கலாசார ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறு அல்ல என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், போலீஸார் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். இருப்பினும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.