துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா என்ற 160 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 148வது மாடியில் பார்வையாளர் தளம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான பார்வையாளர் தளம் என்ற 4வது கின்னஸ் சாதனையை புர்ஜ் கலிபா படைத்துள்ளது. தரையில் இருந்து 2,722 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிபா, மிக உயர்ந்த கட்டடம், மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கட்டடம், மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி என ஏற்கனவே 3 கின்னஸ் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.