ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை 3 குண்டுகள் வெடித்தது. இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது வடக்கு பாக்தாத்தில் ஒரு போலீஸ் சோதனை சாவடி அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் 30 பேர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு பாக்தாத்தில் ஒரு புகழ் பெற்ற சந்தையின் அருகே சாலையோரத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பல கடைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதே போல் கிழக்கு பாக்தாத்தின் ஹபிபியா மாவட்டத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.