விஜய் டிவியில் 10 நாட்களுக்கு முன் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.இது 2 பாகங்களாக பிரித்து ஒளிபரப்பபட்டது. இதில் முதல் பாகத்துக்கு போட்டியாக சன் டிவியில் சிங்கம் 2 படம் ஒளிபரப்பபட்டது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை குறைந்தபட்சம் 2 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறியது. இதில் அஜித்துக்கு விருது தராததால் அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் இருந்தனர். எனவே அஜித் ரசிகர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சன் டிவி முடிவு எடுத்தது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க 2 ஆம் பாகத்துக்கு போட்டியாக வீரம் படத்தை போட்டார்கள்.
இதன் காரணமாக டி..ஆர்.பி. போட்டியில் வெல்ல போவது யார் என கடும் சண்டை நடந்து கொண்டு இருந்தது. இறுதியில் அதன் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜூலை 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சேனல் அதிகமாகப் பார்க்கப்பட்டது என்ற நிலவரம் அந்த டி.ஆர்.பி மூலமாக தெரியவந்துள்ளது. சென்னை நகரை பொருத்தவரையில் டி.ஆர்.பி. யில் விஜய்க்கு டிவிக்கு 10 புள்ளிகளும், சன் டிவிக்கு 11 புள்ளிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தை பொருத்தவரையில் விஜய் டிவிக்கு 10 புள்ளிகளும், சன் டிவிக்கு 9 புள்ளிகளும் தரப்பட்டு உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரையில் தளபதியும், சென்னையை பொருத்தவரையில் தலயும் வென்று உள்ளார்கள்.
The TRP battle between vijay tv show vijay awards and sun tv movie veeram on july 27 th. It shows the war between vijay and ajith.