கலிபோர்னியாவை சேர்ந்த ஜுலியட் மெட்னாட் என்னும் பெண் ஏ.டி.எம். நிலையத்துக்கு சென்று கார்ட்டை ஸ்வைப் செய்து விட்டு பணம் வரும் என்று காத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பணம் வெளியே வருவதற்கு முன் அங்கிருந்த பாம்பு ஒன்று வெளியே வந்து எட்டிப்பார்த்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியுற்றார். உடனடியாக வெளியே வந்து காவலர்களிடம் புகார் தெரிவித்தார். காவலர் உள்ளே சென்று பார்த்தபோது மிஷினை சுற்றி பாம்பு ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்தார்.
உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். வன விலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாம்பை அகற்றினர். அந்த ஏ.டி.எம். மிஷின் செண்டரில் எலிகள் நடமாடுவதாகவும், அதை பிடிக்கவே அந்த பாம்பு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெஷினுக்குள் பாம்பு சென்றதால் சில தொழிற்நுட்ப கோளாறுகள் நடந்து உள்ளன. எனவே அந்த ஏ.டி.எம். தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
snake came in atm instead of cash, so that the woman got shocked.