சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய தம்பதியினர், சப்பாத்தி செய்யும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் 'ரோடிமேடிக்’ என்ற சப்பாத்தி செய்யும் இந்த ரோபோவை வடிவமைக்க 6 வருடங்கள் கடினமாக உழைத்துள்ளனர்.
இந்த ரோபோ இன்னும் விற்பனைக்கு வராத நிலையிலும், அமெரிக்காவில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதோடு, இவர்களது கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த இயந்திரத்தில் சப்பாத்தியின் சுற்றளவு, தடிமம், மென்மை என அனைத்தையும் உள்ளிட்டு ஒரு நிமிடத்திற்குள் ஒரு சுட்ட சப்பாத்தியை ரோபாவால் தயாரிக்க முடியும்.
மேலும், அடுத்த வருடம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோவின் விலை இந்திய மதிப்பில் ரூ. 36,752 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.