இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண்
ஏஜென்ட் விரித்த காதல் வலையால், முக்கிய ராணுவத் தகவல்களை அந்த பெண்ணுக்கு
கொடுத்தது தெரியவந்துள்ளது.
செகந்திராபாத்தில் உள்ள ராணுவத்தின் இஎம்இ பிரிவில் நாயக் சுபேதராக இருந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பத்தான் குமார் போடரிடம், பாகிஸ்தான் பெண் ஒருவர் அனுஷ்கா அகர்வால் என்ற பெயரில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
தன்னை ஜான்சியில் வசிப்பதாக பத்தான்குமாரிடம் கூறி பழகிய அந்த பெண், தனது நிர்வாணப் படங்களையும், குளியல் காட்சிகளையும் பத்தான் குமாருக்கு அனுப்பி ஆசையைத் தூண்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
பின்னர், பத்தான் குமாரிடம் இருந்து முக்கிய ராணுவ தளங்கள் குறித்த தகவல்கள், பாதுகாப்புப் படையினர் எங்கெல்லாம் நிலை கொண்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை அந்த பெண் கேட்டறிந்துள்ளார்.
இந்தப் பெண்ணுக்குத் தகவல் கொடுப்பதற்காக ராணுவத்தினர் பலருடன் பேசி தகவல்களைக் கறந்த பத்தான் குமார், மிகப் பெரிய அளவில் தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துள்ளார்.
இவர் தொடர்ந்து பல நாட்கள் இரவு நேரத்தில் கூடுதலாகப் பணியாற்றியதால் சந்தேகமடைந்த மேலதிகாரிகள் இவரது கணணியை சோதனையிட்டபோது அனைத்தும் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து, அவரை கைது செய்து, அவர் மீது ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இவரை காதல் வலையில் வீ்ழ்த்தி ராணுவ ரகசியங்களைக் கவர்ந்த பாகிஸ்தான் பெண் யார் என்பது தெரியாத நிலையில், பத்தான் குமார் கொடுத்த ராணுவ ரகசியங்களில் பெரும்பாலானவை சென்னை தொடர்பான ராணுவத் தகவல்கள் என்று தெரியவந்துள்ளது.