முஸ்லிம்களுக்கு முக்கிய பண்டிகை என்பது ரம்ஜான் பண்டிகை ஆகும், அது கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இதற்கு நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என அவருக்கு புதிய பிரச்சனை வந்து உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் எல்லா பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது மரபு, வாஜ்பாய் கூட தவறாமல் ரம்ஜான் வாழ்த்து தெரிவிப்பார். மதசார்ப்பற்றவர் என கூறி கொள்ளும் மோடி ஏன் ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்த்யோபாத்யாய் கேள்வி எழுப்பினார். ஆனால் தனி நபரின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் இல்லை என சுமித்ரா மகாஜன் தெரிவித்துவிட்டார்.
இதற்கு பதில் அளித்த வெங்கய்யா நாயுடு மோடி வாழ்த்து தெரிவித்தார் என்றார்.