இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தையோட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி , சுதந்திர தின உரையாற்றினார் . அந்த உரையில் தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்தும் அறிவிப்பு உட்ப்பட சில திட்டங்களை அறிவித்தார் . முதல்வர் அறிவித்த திட்டங்கள் கீழ் வருமாறு :
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வுதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் . அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் 4,500 இல் இருந்து 5,000 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 1,955 பேர் பயனடைவர் .
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறப்பு பணியாற்றி நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதியமான 2,000 ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 195 பேர் பயனடைவர் .
தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் இனிமேல் கலவை சாதத்துடன் மசால் சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார் .
மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் , டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் .