காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் வெறும் 44 தொகுதிகளை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. இதனால் அந்த கட்சியால் எதிர்கட்சி தலைவர் பதவியை கூட பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி தான் என பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. அவரின் தவறான அனுகுமுறையால் தான் தோல்விக்கு காரணம் என பல மூத்த தலைவர்கள் உணர்ந்தார்கள். என்ன அவர் சோனியா காந்தியின் மகன் என்பதால் நேரடியாக சொல்ல முடியவில்லை.
இப்போது காங்கிரஸ் கட்சி உயிர் போகும் நிலையில் உள்ளது . அதனை யாராவது அதனை யாராவது காப்பாற்றி அதனை புத்தியிர் பெற செய்ய வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மட்டும் தான் இருக்கும். நிஜ வாழ்க்கையில் அது இல்லாத ஒன்றாக மாறி விடும். அதனை காப்பாற்றும் சக்தி பிரியங்கா காந்தியிடம் உள்ளதாக பலரும் கருதுகிறார்கள். அவர் இந்திரா காந்தி போன்று தோற்றம் மட்டும் இல்லாமல் செயலிலும் அப்படியே செயல் படுகிறார்.
அப்படி அவர் வந்தால் தேசிய பொது செயலாளர் அல்லது உபி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம். மோடியின் மக்கள் செல்வாக்கை மீறி பிரியங்கா மக்களின் பிரியத்தை பெறுவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.