இஸ்ரேல் காஸா மீது நடத்தும் போரை ஒத்து உருவாக்கப்பட்ட கேம் தான் " பாம் காஸா " . இந்த சர்ச்சைக்குரிய கேமை திங்கட்கிழமை அன்று பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் .
ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த கேமை 1000 த்துக்கும் மேற்பட்டவர்கள் விளையாடி உள்ளார்கள் . இந்த விளையாட்டில் தீவிரவாதிகள் மீது நாம் பாம் போட வேண்டும் . அதே நேரத்தில் பொது மக்களை காப்பாற்ற வேண்டும் . பொதுமக்கள் அதிகமாக கொல்லப்பட்டால் கேம் முடிந்து விடும் .
பல மக்களின் எதிர்ப்பினால் இந்த கேமை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் .