தமிழில் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் தனுஷ். தமிழில் கடந்த
சில படங்களை தோல்வி படங்களாக தந்த தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி வெற்றி
படமாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்து நடிக்க வேல்ராஜ் இயக்கினார்.
ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது
அமிதாப்புடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்
வேலையில்லா பட்டதாரி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உரிமை கோரி பாலிவுட்
தயாரிப்பாளர்கள் சிலர் தனுஷை அணுகினார்கள்.
ஆனால் அப்படத்தை தானே இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தனுஷ் தெரிவித்தார்.
தமிழில் இப்படத்தை இயக்கிய வேல்ராஜ் இந்தியிலும் இயக்குகிறார். தற்போது
நடித்து வரும் இந்தி படத்தின் பணிகள் முடிந்த பிறகு இப்படத்தின் பணியில்
ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இந்தியில் தனுஷ் ஜோடியாக நடிக்கும் நடிகை!