தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பணியகம் நேற்றிரவு தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தின் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கண்ணாடிகள் நொருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கேவலப்படுத்தும் வகையில், வெளியான கட்டுரை மற்றும், ஒளிப்படம் தொடர்பாக தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, திருச்சியிலுள்ள சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.எனினும், நேற்றிரவு, ஒரு குழுவினர் திடீரென சிறிலங்கன் விமான நிறுவனத்தின் மீது கற்களை வீசித் தாக்கினர்.இதில், நிறுவனத்தின் முன்பக்க கண்ணாடிகள் நொருங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.