கேரளாவில் அழகிகள் மூலம் தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை செக்ஸ்
வலையில் வீழ்த்தி அதை ஆபாச படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்
போலீசில் சிக்கியது.
இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட ஜெயச்சந்திரன் மற்றும் அந்த கும்பலைச் சேர்ந்த அழகிகள் ருச்சனா, பிந்தியா ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜெயச்சந்திரன் திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்தபோது போலீஸ் வலையில் சிக்கியதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களின் வலையில் வீழ்ந்தவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் அவமானம் தாங்காமல் சிலர் தற்கொலை செய்துள்ள திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனால் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ருச்சனா, பிந்தியா ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளி வந்தனர். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதனால் அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு ருச்சனா, பிந்தியா ஆகியோர் வக்கீலுடன் கொச்சி போலீஸ் ஐ.ஜி. ஆபீசுக்கு சென்று சரண் அடைந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் நிஷாந்தினி விசாரணை நடத்தினார்.
திருவனந்தபுரம் வெஞ்ஞார மூடையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவீந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு அழகிகள் ருச்சனா, பிந்தியா மீது உள்ளது. எனவே இது தொடர்பான விசாரணைக்காக வெஞ்ஞார மூடு போலீசில் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்படுகிறார்கள்.