
Mantes-la-Jolie (Yvelines) யில் நேற்று 35 வயது ஆண் ஒருவர் வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டுள்ளார். square du Vexin இலிருக்கும் இவரது வீட்டின் கண்ணாடியை உடைத்து உள் நுழைந்த முகஆடி அணிந்தபடி ஆயுதங்களுடன் வந்த நால்வர் வீடடில் இருந்த இந்த நபரை அடித்துச் சிற்றுந்தின் பின் பெட்டிக்குள் போட்டுக் கடத்திச் சென்றுள்ளனர்.
பல மணி நேரங்களின் பின்னர் மிகவும் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டுப் பலத்த காயங்களுடள் ழுசபநசரள கிராமத்தில் புற்பற்றைக்குள் வீசி எறியப்பட்டிருந்தார். பற்றைக்குள் கிடந்த இவர் டீழளைளநவள பகுதியின் ஜோந்தாமினரால் மீட்கப்பட்டு கிளிசியிலுள்ள Beaujon (Clichy - Hauts-de-Seine) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த இரத்தக் காயங்களுடன் தோற்பட்டை எலும்புகள் எல்லாம் நொறுங்கிய நிலையில் இவர் அசவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வேர்செய் நகர விசேடக் காவற்துறையினர் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
