கரிபியன் பிரிமீயர் லீக்கில் அதிவேக சதத்தை ஆண்டிகுவா ஹாபில்ஸ் அணியின் சாமுவல்ஸ் அடித்தார். அவர் 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது புதிய சாதனை ஆகும். அவர் தனிநபராக சாதனை செய்த போதும் அணியால் வெல்ல முடியவில்லை. அவர் கயானா வாரியர்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்தார். முதலில் விளையாடிய வாரியர்ஸ் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆண்டிகுவா அணி 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.