
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் அந்த நாட்டின் உள்ளூர் பத்திரிகைகளில் வந்துள்ள தகவலின் படி காராச்சி விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் இல்லாமல் வந்துள்ளனர்.
அணித்தலைவர் ஹொட்டலில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது அவரை மறந்து மற்ற அணி வீரர்கள் மட்டும் விமான நிலையத்திற்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
சிலர் மிஸ்பா உல் ஹக்கின் சோம்பேறிதனம் தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நல்லவேளையாக அனைவரும் சரியான நேரத்தில் விமானத்தை பிடித்து இலங்கை பயணமாகினர்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 6ம் திகதி தொடங்கவுள்ளது.