ஒரே படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் நாயகன் டி லியனார்டோ டி, 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார். தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறும் லியனார்டோ, ஆனால் குழந்தைகள் என்றால் தனக்கு கொள்ளை பிரியம் என்றும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்றும் கூறியுள்ளார்.
ஜெர்மன் மாடல் அழகி டோனிகார்னுடன் டேட்டிங் செய்து வரும் லியார்னடோ, அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறாராம். அதற்கு டோனியும் சம்மதித்துவிட்டதால் கூடியவிரைவில் லியார்னடோவை அப்பாவாகலாம் என ஹாலிவுட்டில் பேசிக்கொள்கின்றனர்
மேலும் டோனி, லியார்னடோவின் தூரத்து உறவு என்பதும் தற்செயலாக லியார்னடோவுக்கு தெரிய வந்துள்ளதால் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம். தற்போது மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று வரும் கலாச்சாரம் பெருகி வருவது குறித்து லியார்னடோவிடம் கேட்டபோது, குழந்தைகளை பிரியமாக, புத்திசாலித்தனமாக வளர்ப்பது ஒன்றுதான் ஒரு தந்தையின் கடமை. திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் ஒரு தந்தைக்குரிய கடமையை நான் சரியாக செய்வேன் என்று கூறுகிறார். அவருடைய கேரக்டரையே புரிந்து கொள்ள முடியவில்லை என நிருபர்கள் குழம்புகின்றனர்.