தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜூனும் நடிக்க இருக்கின்றனர்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழில் மாபெரும் வசூலை குவித்தது. தனது சொந்தப்படமும், 25வது படமுமான இந்த படத்தின் வெற்றி தனுஷை மிகப்பெரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. இந்த படத்தை இந்தியில் தனுஷே ரீமேக் செய்து நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு உரிமையை கேட்டு தனுஷிடம் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா அணுகியுள்ளார். அல்லு அர்ஜுனா நடித்த ஆர்யா என்ற படத்தை ரீமேக் செய்து 'குட்டி' என்ற படத்தில் தனுஷ் நடித்தார். இதனால் தற்போது அல்லு அர்ஜுனாவுக்கு விஐபி படத்தில் தெலுங்கு உரிமையை அல்லுவுக்கு கொடுக்க தனுஷ் சம்மதித்து உள்ளார்.
வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த அலியா பட் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதால் இப்போதே இந்த படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தனுஷ் தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் இன்றி அவர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது அனேகன், மற்றும் பால்கியின் படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ், இந்த இரண்டு படங்களை முடித்தவுடன் விஐபி இந்தி ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.