இன்று கூடிய மத்திய அமைச்சரவை , சிறுவர்கள் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . இனி அந்த மசோதா அனுமதிக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் .
இந்த சட்டத்தின் மூலம் 16 வயது முதல் 18 வயது சிறுவர்களை வாலிபர்களாக வைத்து தண்டிக்கலாமா அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பலாமா என்ற முடிவை எடுக்கும் உரிமை இளவயதுக்கோரான நீதி அமைப்புக்கு வழங்கப்படும் .
2012 முதல் 2013 ஆண்டுக்குள் சிறுவர்களால் செய்யப்படும் தவறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதால் இந்த மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளனர் . அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .