தமிழில் கஜினி, போக்கிரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அசின். இவர் கஜினி படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அதன் பிறகு தமிழ் பக்கம் வரவில்லை. இப்போது தமிழ் படத்தில் நடிப்பதற்காக சில கதைகளை கேட்டு வருகிறார். இவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார். மும்பையில் ஒரு சமூக அமைப்பு சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் அசின் கலந்து கொண்டதுடன், ரத்த தானமும் செய்தார். அத்துடன் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் அவர் முன்வந்தார். அதற்கான உறுதி மொழி பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார்.