கங்குலி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று விட்டாலும் அவரது ரசிகர்கள் இன்னும் அவரை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர் எப்போது எந்த கருத்து சொல்வார் என ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் மோசமாக இருந்த இந்திய அணியை தனது சிறப்பான கேப்டன்சியால் சிறந்த அணியாக மாற்றியவர் அவர். இவர் அடுத்து இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பற்றி தினத்தந்தி வாசகர்களுக்கு கட்டுரை எழுத உள்ளார்.