ஆஸ்டான் யுனிவர்சிட்டி பட்டதாரியான லேய்க் பர்னெல் என்பவர் உலகின் அதிவேக சார்ஜர் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இந்த சார்ஜரின் மூலம் உங்கள் மொபைலை நீங்கள் 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும் .
இந்த சார்ஜரை நீங்கள் உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பேக்கிலோ வைத்து இருக்கலாம் . இனிமேல் நீங்கள் சார்ஜ் செய்திட பிளக் பாய்ண்டையோ , யு.எஸ்.பி கேபிளையோ தேடி அலைய வேண்டாம் . இந்த பிளஸ் பேட்டரி கூடிய விரைவில் விற்பனைக்கு வர உள்ளது .