இப்போது போனில் இலவசமாக பேசுவதற்கு பேஸ் டைம், வைபர், ஸ்கைப் போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் சரியாக உபயோகப்படுவதில்லை. அந்த குறையை போக்குவதற்கு புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது. அதன் பெயர் நானு. இது முதலில் ஆன்ட்ராய்டில் மட்டும் வந்து உள்ளது. இதன் மூலம் 2 ஜி இன்டெர்னெட் வசதி இருந்தாலே போதும், நாம் இலவசமாக பேசி கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷன் இருந்தால் போதும் , இருவரும் பேசி கொண்டே இருக்கலாம். இதன் மூலம் 10 நிமிடங்கள் பேசினால் 1 எம்.பி. டேட்டா தான் செலவு ஆகும். இந்த அப்ளிகேஷன் இல்லாதவருடன் நாம் இலவசமாக பேசலாம், ஆனால் அது 15 நிமிடங்கள் தான். இதில் எந்த விளம்பரங்களும் வராது. இதன் மூலம் 41 நாடுகளில் உள்ள லேன்ட்லைன்களுக்கும், 9 நாடுகளில் உள்ள மொபைல் போன்களுக்கும் பேசலாம்.
இதனை விரிவுபடுத்த உள்ளார்கள். அடுத்து ஐஓஎஸ், வின்டோஸ் தரைதளத்துக்கும் இதனை கொண்டு வர உள்ளார்கள். அடுத்து இலவச எஸ்.எம்.எஸ். வசதியும் வர உள்ளது.