சச்சின் என்றாலே கடுமையான உழைப்பு என்பது அனைவரும் அறிந்தது, உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் கூட நெட் பிராக்டிசை அவர் எப்போதும் நிறுத்துவதே இல்லை, மிக நீண்ட அனுபவம் கிடைத்த பின்பும் கூட நெட் பிராக்டிசை சின்சியராக செய்பவர் என்று தான் சச்சின் குறித்து அனைவரும் அறிந்திருந்தோம், ஆனால் அதை புரட்டி போடும் உண்மையை வெளியிட்டார் டிராவிட்
2003 கிரிக்கெட் உலக கோப்பையில் சச்சின் இந்தியாவுக்காக எல்லா போட்டிகளிளும் விளையாடி 673 ரன்கள் குவித்தார். இந்த சாதனை எந்த உலக கோப்பையிலும் நிகழ்த்தப்படாத சாதனை ஆகும். ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்னும் சாதனை இன்று வரை சச்சினிடமே உள்ளது. 2003 க்கு பிறகு 2 உலக கோப்பை முடிந்து விட்டது, ஆனால் இந்த சாதனையை யாரும் இன்னும் நெருங்க கூட இல்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் 98 ரன்கள் குவித்தது சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆட்டம் ஆகும்.
இவ்வாறு விளையாடியதற்கு சச்சின் கடுமையான பயிற்சி எடுத்து இருப்பார் என பலரும் நினைத்து இருப்பார்கள். இது குறித்த உண்மையை ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். அந்த தொடர் முழுவதும் சச்சின் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை எனபது அதிர்ச்சி தரும் உண்மையாகும். அவர் ஏன் வலைபயிற்சியில் ஈடுபடவில்லை என டிராவிட் கேட்ட போது , நான் எனது பேட்டிங் பற்றி இப்போது சிறப்பாக உணர்கிறேன், வலையில் வந்து விளையாடி ‘டச்’சை விரயம் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு நான் உணரும்போது களத்தில் சிறப்பாக பேட் செய்வேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
சச்சினுடன் விளையாடியதை மிக பெரிய பெருமையாக நினைப்பதாக டிராவிட் தெரிவித்தார்.