காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இங்கு மதுரை வத்தலகுண்டை சேர்ந்த நாகூர் மொய்தீன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் காரைக்கால் பூவத்தை சேர்ந்த கார்த்திகா, பேராசிரியையாக உள்ளார். அந்த ஆசிரியர் பேஸ்புக்கில் தனது போட்டோவை அப்லோட் செய்து உள்ளார். அதற்கு நாகூரி மொய்தீன் கமென்ட் செய்து உள்ளார். இதனால் கோபமான அந்த ஆசிரியர் தனது கணவருடன் சென்று போலீஸில் புகார் செய்து உள்ளார்.
போலீஸார் அந்த மாணவனை தாக்கி அவனை அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்கள். இதனால் அந்த மாணவன் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். அந்த மாணவனை தாக்கிய போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கூடி, துணை கலெக்டர் மாணிக்க தீபனிடம் மனு கொடுத்தனர்.