வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் அவசர எண்ணான 999 கால் செய்து வீட்டில் தீ பிடித்து விட்டது என்று பதற்றத்துடன் கூறினார் . தீ அணைப்பு வீரர்கள் விரைந்துச் சென்று தீயை அணைத்தனர் .
தீ பிடித்தற்கான காரணத்தைக் கேட்கையில் , தனது வீட்டிற்குள் ஒரு சிலந்து வந்துவிட்டதாகவும் , அதனைக் கொழுத்த நினைத்த போது , அந்த தீ வீடு முழுவதுமாக பரவி விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் .
அவர் நினைத்து இருந்தால் ஒரு செருப்பை வைத்து அடித்தோ , பேப்பரினால் எடுத்து வெளியேவோ போட்டு இருக்கலாம் . ஆனால் அவரோ சிலந்தியைக் கொழுத்த , இறுதியில் அது வீடு முழுவதும் பரவி அவருக்கு 60 ஆயிரம் டாலர் செலவு அவர் தலையில் விழுந்துள்ளது .