BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 7 August 2014

தனது அம்மாவை தேடி செல்லும் போது , தனது கணவர் தான் தன்னுடைய சகோதரன் என்று கண்டுபிடித்த பெண் !!



பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் அட்ரியனா (37) மற்றும் லியன்ட்ரோ (39) . இருவரும் கடந்த ஏழு வருடங்களாக திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் . இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளார் .

அவர்கள் இருவரும் நீண்ட காலமாக தன்னுடைய அம்மாவை தேடிக் கொண்டு இருந்தார்கள் . ஆனால் இருவரும் தேடியது ஒரே நபர் தான் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை . இருவரையும் சிறு வயதில் அவர்களின் அம்மா விட்டுவிட்டு பிரிந்தார் .

அட்ரியனா தனது அம்மாவைக் கண்டுபிடிக்க ரேடியோ நிகழ்ச்சியின் உதவியை நாடினார் . அந்த ரேடியோ அவரின் அம்மாவைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தது . ஆனால் அதற்கு அடுத்து தான் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது . அவரது அம்மா ரேடியோவில் பேசும் போது , தனக்கு ஒரு மகன் இருந்ததாகவும் , மகனின் பெயர் லியன்ட்ரோ என்றும் கூறினார் . இதைக் கேட்ட அட்ரியனா அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்று அவர் தன்னுடையக் கணவர் என்பதை தெரிவித்தார் .

இது குறித்து அட்ரியனா கூறுகையில் , " நாங்கள் முதலில் எங்கள் இருவரின் அம்மா பெயர் ஒன்றாக இருக்கும் போது , இது ஏதோ தற்செயலாக நடந்தது என்று நினைத்தோம் . ஆனால் இப்போது தான் தெரிகிறது எங்கள் இருவருக்கும் ஒரே தாய் . ஆனால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் . இது எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை " என்றார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies