கே.எப்.சி என்னும் உணவகம் அனைவரும் விரும்பிச் சென்று உண்ணும் உணவகங்களில் ஒன்று . இந்தியாவில் இது மிகவும் பிரபலமடைந்த ஒன்றாக மாறி வருகிறது . சில வாரங்களுக்கு முன் அந்த கே.எப்.சி யில் பறிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததாக செய்திகள் வந்தது . உடனே சிலர் இந்தியாவில் தான் இப்படி நடக்கிறது . மற்ற நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை என்று இந்தியாவை குறை கூறினர் .
ஆனால் இங்கிலாந்தின் துர்ஹாம் நகரத்தில் ஜோடி ஒன்றிற்கு வழங்கப்பட்ட பெப்ஸியில் உயிருடன் இருந்த ஒரு பூச்சி இருப்பதை அந்த ஜோடி பார்த்தனர் . இதனால் கோவமடைந்த அந்த ஜோடி அவர்களுடன் சண்டை போட்டனர் . ஆனால் அங்கே பணிபுரிபவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர் .
ஆனால் அந்த நாள் இரவில் அவர்களாகவே இந்த ஜோடிக்கு கால் செய்து மன்னிப்பு கேட்டு , அவர்களுக்கு மீண்டும் உணவு வழங்கினர் .