நாம் அனைவராலும் எளிதில் மறக்க முடியாத சம்பவம் 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி . அந்த சம்பவத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . பலர் தங்களுடைய குடும்பத்தை தொலைத்த சோகத்தில் இருந்தனர் . அதே போல தனது மகளை இழந்து விட்டதாக நினைத்த பெற்றோர்க்கு பத்து ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய மகள் கிடைத்த அதிசயம் இந்தோனேஷியாவில் நடந்து உள்ளது .
ஜமாலியா என்பவரின் மகள் ஜன்னா . இவர்கள் 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த போது சுமத்ரா தீவின் மேற்கு பகுதிகளில் வசித்து வந்தனர் . அந்த தீவில் வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் . ஆனால் ஜமாலியா மற்றும் அவரது கணவர் தப்பித்தனர் . தங்களுடைய மகள் ஜமாலியா மற்றும் அவர்களின் மகன் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் . பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் இறந்து விட்டனர் எனக் கருதி மிகவும் வருந்தினர் .
ஆனால் ஜமாலியாவின் சகோதரர் ஒரு கிராமத்தில் ஜன்னா போன்ற தோற்றமுடைய சிறுமி ஒருவரைப் பார்த்தார் . பின்னர் அவரை அழைத்து விசாரித்ததில் அவர் தான் ஜன்னா என்பது உறுதியானது . சுனாமி அடித்த அவரை ஒரு மீனவர் காப்பாற்றி வளர்த்துள்ளார் . இதனால் ஜன்னாவின் பெற்றோர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
ஜன்னா மகிழ்ச்சியாக தன் பெற்றோருடன் சென்றார் .