கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி விஜய் –
அமலாபால் திருமணம் நடந்த நிலையில், ஒரே மாத இடைவெளியில் இருவருக்கும்
மீண்டும் திருமணம் நடக்கவுள்ளது. ஆனால் இம்முறை ஷூட்டிங் திருமணம். விஜய் –
அமலாபால் நடிக்கும் விளம்பர படம் ஒன்றுக்காக இந்த திருமண ஷூட்டிங்
நடக்கவிருப்பதாக தெரிகிறது.
தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில்
விஜய் இயக்கத்தில் நடித்த அமலாபால், பின்னர் அவரையே காதலித்து கடந்த ஒரு
மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர்
அமலாபால் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. ஆனாலும் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் மட்டும்
ஈடுபட உள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் துபாயை தலையிடமாக கொண்டு
விளங்கும் பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தூதராக நியமனம் செய்யப்பட்ட
அமலாபால், அந்த நிறுவனத்திற்காக விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க
ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விளம்பர படத்தில் அவரது கணவர் விஜய்க்கு
ஜோடியாகவே அவர் நடிக்கிறார். இந்த விளம்பரப்படத்தை விஜய்யே இயக்கவுள்ளார்
என்பது கூடுதல் தகவல்.
விஜய்-அமலாபால் இருவரும் திருமணம் மற்றும்
ஹனிமூன் செல்லும் காட்சிகளுடன் இந்த விளம்பரப்படம் ஆரம்பமாகிறது. இந்த
விளம்பரப்படத்தில் அமலாபாலுடன் நடிப்பது தனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக
இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரப்படத்தை விஜய்யின் ஆஸ்தான
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கேமராமேனாக பணிபுரிய உள்ளார். விரைவில் இந்த
விளம்பரப்படத்தின் ஷூட்டிங் மகாலபலிபுரத்தில் நடக்கவுள்ளது.