தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போவது கண்டிப்பாக சின்ன பட்ஜெட் படங்களே. அந்த வகையில் இராதகிருஷ்ணன்.பார்த்திபன் நீண்ட இடைவேளிக்கு பிறகு இயக்கியிருக்கு படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.
பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தானே, அவர் நடித்தாலும் சரி, பேசினாலும் சரி. அந்த வகையில் படம் இயக்கினால் மட்டும் வித்தியாசம் இல்லாமல் இருக்குமா? கதை இல்லாமல் ஒரு படம் என படம் ஆரம்பிக்கும் போதே எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டார்.
அவரே கதை இல்லை என்று சொல்லிவிட்டார், நாம் எப்படி கதை சொல்வது? என்று யோசித்தால் படம் பார்த்து முடித்த பிறகு நமக்கு கிடைத்த கதை இது தான். சினிமாவில் இயக்குனர்கள் ஆகவேண்டும் என்று சில இளைஞர்கள், எப்படி கதை சொன்னால் தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்கலாம் என்று ரகளையாக முதல் பாதி செல்கிறது.
பின் இரண்டாம் பாதியில் தன் குறிக்கோளுக்காக காதலியை தள்ளிவைக்க, பின் மனக்கசப்பு, இதில் வேறு ஒரு காதல். இச்சூழ்நிலையில் அவர் படத்தை எடுத்தாரா? காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறது.
படத்தின் பலம் திரைக்கதை தான், அது பார்த்திபனின் இத்தனை வருடம் அனுபவமே ஒரு சாட்சி, மிக நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளார். புதுமுகங்களின் நடிப்பு அவர்களுடன் சேர்ந்து தம்பி ராமய்யா அடிக்கும் லூட்டி என முதல் 40 நிமிடம் சிரித்து வயிறு வலி வருவதற்கு ஃபுல் கேரண்டி. மேலும் பல நடிகர்கள் நட்புக்காக தோன்றுவது இயக்குனர்களின் புத்திசாலித்தனம். சத்யா பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். அதேபோல் ராஜரத்தினம் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது.
பலவீனம் பெரிதாக சொல்வதற்கு இல்லை, பார்த்திபன் அவர் ஸ்டையிலில் யோசித்த பல காட்சிகள் சாமனிய மக்களுக்கு புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.
மொத்தத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- இராதாகிருஷ்ணன்.பார்த்திபன் திருப்தி(அடைந்து) படுத்திவிட்டார்.
ரேட்டிங்-3.0/5