கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு கவுரவமாக எம்.பி. பதவியை காங்கிரஸ் அரசு தந்தது. ஆனால் அதனை எதற்கும் பயன்படுத்தாமல் இருந்தார். ஆனால் அதற்குரிய சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டார். கடந்த வருடம் முழுவதும் அவர் பாராளுமன்றம் வந்ததற்கான அடையாளமே இல்லை. இவ்வாறு சச்சின் நாடாளுமன்றம் வராதது பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது. தனது அண்ணனுக்கு சர்ஜரி செய்ததால் தன்னால் நாடாளுமன்றத்துக்கு வர முடியவில்லை என விளக்கம் தந்தார்.
இந்த விவகாரத்தில் சச்சின் மற்றும் ரேகாவின் பெயர்கள் மட்டும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளன. ஆனால் இவர்களை போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 33 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கம் எட்டி பார்ப்பதில்லை. அவர்களை மட்டும் யாரும் எதுவும் கேட்பதில்லை. சச்சின் மட்டும் என்ன பாவம் செய்தார், தனியாக விமர்ச்சிக்கபடுவதற்கு. நடிகை ஹேமாமாலினி, அமர் சிங், அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் கூட நாடாளுமன்றம் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை.
சச்சின் மீது தவறு உள்ளது உண்மை தான் ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றம் வராத அனைவரிடம் இதனை கேட்பதும் தான் சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.