இந்திய சுதந்திரத்திற்கு முன் காஷ்மீரும் தெலுங்கானாவும் இந்தியாவின் அங்கம் அல்ல. அவை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்பியுமான கவிதா கூறினார், இதையடுத்து பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரில் ஜாமீனில் கவிதா மீது ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் மகள் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஹைதராபாத்தில் நிலவுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்தியாவுடன் தானாக இணைந்தன அல்லது இணைக்கப்பட்டன. காஷ்மீரும், ஹைதராபாத்தும்(தெலுங்கானா) மட்டும் இந்தியாவுடன் இணையவில்லை, அதன் பின் போலிஸ் நடவடிக்கையை அடுத்து ஹைதராபாத்(தெலுங்கானா) இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, காஷ்மீரும் காஷ்மீர்-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து இணைக்கப்பட்டது.
உண்மையை சொல்வதற்கெல்லாம் ஜாமீனில் வரமுடியாத வழக்கு போடுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கு நிலவுவது பாஜகவின் எத்தேச்சாதிகார போக்கை காண்பிக்கின்றது.
Telungana CM chandrashekara rao daughter Kavitha, Member of Parliament (MP) has told that Kashmir and Telungana never been part of India before Independence. These 2 were annexed to india forcibly. BJP advocate complaint to police about her speech and Police registered case against CM daughter Kavitha MP in non bailable sections.