பரத்தின் 25-ஆவது படம் ஐந்தாம் தலைமுறை சித்த
வைத்திய சிகாமணி. கவிதாலயாவின் தயாரிப்பில் பரத் நடித்துள்ள இப்படம்
இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பரத்துக்கு
ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ்,
எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22
காமெடி, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
படத்தை இயக்கியிருக்கும் ரவிச்சந்திரன் படம் குறித்து, இது ஒரு முழுநீள
காமெடி படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு மெசேஜும்
இருக்கிறது. என்று படம் தொடங்கிய நாள் முதலே கூறி வருகிறார். ஆனாலும் அவர்
சொல்வதை சித்த மருத்துவர்கள் நம்பத் தயாராக இல்லை. சித்த வைத்தியரின் கதை
என்பதை வைத்தும், இது ஒரு காமெடி படம் என்பதை வைத்தும் இப்படத்தில் சித்த
வைத்தியம் தொழில் செய்பவர்களை அசிங்கப்படுத்தி இருப்பார்களோ என்ற
சந்தேகத்தில் உள்ளனர். அப்படி ஏதேனும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள்
இருந்தால் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்கு
நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய
சிகாமணி படத்தில் ஒரு காட்சியில் சத்தமில்லாமல் ஒரு சதனையை
செய்திருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் பரத்துடன் 22 காமெடி நடிகர்கள்
இணைந்து நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள
அந்தக் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில்
ஹைலைட் காட்சியாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குநர்.