இந்தியாவுடனான 4 வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்துக்காக பேட் செய்து கொண்டு இருந்த போது இந்திய வீரர் வருண் ஆரோன் வீசிய பந்து ஸ்டுவார்ட் பிராடின் மூக்கை பதம் பார்த்தது. உடனே ரத்தம் கொட்டியது. அதன் பிறகு அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. மூக்கில் கட்டு போட்டு இருந்தார். இந்நிலையில் 5 வது டெஸ்டில் ஆட போவதாக பிராட் கூறியுள்ளார். அதுவும் மாஸ்க் போட்டு கொண்டு ஆடப்போவதாக கூறியுள்ளார். எந்த மாஸ்க்கை அணிவது என டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.