வேட்டை படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா இணைந்து
நடித்து இன்று வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். பாட்ஷா, நாயகன், பில்லா
போன்று ஒரு தாதாவை பற்றிய படம் என லிங்குசாமி படம் வெளியாவதற்கு முன்பு
தெரிவித்திருந்தார். சரி அவரு சொன்னதெல்லாம் எதுக்கு (எல்லா இயக்குனரும்
சொல்லுறது தான்) நமக்கு நம்ம கதைக்கு வருவோம்.
மும்பையில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வளர்ந்து வரும் தாதாக்களான ராஜுபாய் (சூர்யா), சந்துரு (வித்யூத்) இருவரும் நெருங்கிய நண்பர்கள், இவர்களின் கூட்டாளிகளை குறி வைத்து புடிக்கிறது போலீஸ் அதில் ராஜூபாய்யின் ஆட்களை சிறைபிடிக்கிறது போலீஸ்.
அவர்களை விடுவிக்க கமிஷ்னரின் மகளான ஜீவா (சமந்தா) கடத்துகிறான் ராஜூ, ஏற்கனவே கல்யாணத்தை விரும்பாத ஜீவா இதை சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்துகிறார். மும்பையின் பெரிய தாதாவாக இருக்கும் இம்ரான் (மனோஜ்) இவர்களை அழைத்து கண்டிக்கிறார்.
இதில் கோவமடைந்த சந்துருவும், ராஜூபாய்யும் இம்ரான் கடத்தி எச்சரித்து அசிங்கப்படுத்துகின்றனர், கல்யாணத்தை நிறுத்திய ராஜூவின் ஸ்டைலை பார்த்து அவர் மீது காதல் வசப்படுகிறார் சமந்தா (இந்த காதலுக்காவே போலீஸ கதையில வச்சு இருப்பாரு போல இயக்குனர் அதுக்கு அப்புறம் போலீஸ் ஆளையே காணம்), இதற்கிடையில் அசிங்கப்பட்ட தாதா சும்மா இருப்பானா சந்துருவை போட்டு தள்ளுகிறான்.
நண்பனை கொன்ற இம்ரானை போட்டு தள்ள முடிவு செய்யும் ராஜூபாய்யை அவனது ஆட்களை வைத்தே சுட்டு தள்ளுகிறான், அடிபட்ட சிங்கம் சும்மா இருக்குமா மாறுவேசத்துல கிருஷ்ணா (ராஜூபாய்) வந்து அந்த துரோகிகளையும், நண்பனை கொன்ற இம்ரானையும் அழிக்க திட்டமிடுகிறான். அவனது திட்டம் பழித்ததா….?? சமந்தாவின் நிலைமை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
இந்த சூர்யாவிற்கு ஒரு மாஸ்சை உருவாக்கும் என லிங்குசாமி கூறியிருந்தார், அது வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தின் பெயரை சொல்லிருப்பாரோ அப்படி தான் இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் எந்த குறையும் இல்லை ஆனால் தாதாவாக தான் சூர்யாவை நினைக்கமுடியவில்லை.
சமந்தாவின் நடிப்பு அற்புதம் படம் முழுக்க உரிச்ச கோழி போல கிளாமரை வாரி இறைத்திருக்கிறார் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட், பின்னனி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் சபாஸ் ஜி.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆக்ஸன், காதல் என அனைத்து பிரேமிலும் மனுஷன் புகுந்து விளையாடிட்டார் கலக்குங்க ப்ரோ நீங்க.
மாஸ் ஹிட்டை கொடுக்க வேண்டும் என நினைத்த லிங்குசாமி கதைகளத்தை சரியாக அமைக்கவில்லை என்பது தான் வருத்தம், விறுவிறுப்பு இல்லாமல் எளிதாக கணிக்ககூடிய திரைக்கதையாக நகர்கிறது படம்.
மொத்தத்தில் அஞ்சான் அறைகுறை
மதிப்பெண்கள் : 2.25/5