BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

விமானிகள் கவனக்குறைவால் 5000 அடி தாழ்வாகப் பறந்த ஜெட் விமானம்: டிஜிசிஏ விசாரணை

விமானப் பயணங்களில் விமானிகள் தூங்கிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்திய விமானங்களில் மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மும்பையிலிருந்து பிரசல்ஸ்ஸுக்கு பறந்துகொண்டிருந்த போயிங் 777 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இரண்டு விமானிகள் பணியில் இருந்துள்ளனர். நீண்ட தூரப் பயணங்களில் தலைமை விமானி சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் அந்த நேரத்தில் துணை விமானி விமானத்தை இயக்கும் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.

அதுபோல் இந்த விமானத்தின் விமானி சிறிது நேரம் தூங்கியுள்ளார். அந்த சமயத்தில் துருக்கியின் வான்வெளியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்ததால் அங்காரா விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டின் ராடாரில் இந்த விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டிருந்த 34,000 அடி உயரத்திலிருந்து 5000 அடி தாழ்வாக இந்த 9W-228 விமானம் பறப்பதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக விமானிக்கு எச்சரிக்கை அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுவாக முக்கியத்துவம் கொண்ட இந்த ஐரோப்பிய வான் போக்குவரத்துத் தடத்தை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். ஈராக், உக்ரைன் போன்ற பிரச்சினை மிகுந்த தடங்களில் இருந்து போக்குவரத்துகள் மாற்றிவிடப்படுவதால் இந்தத் தடமும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுகின்றது. சம்பவம் நடந்த சமயம் மற்றொரு விமானத்திற்கான பயணப்பாதையாக இந்த உயரம் ஒதுக்கப்பட்டிருந்ததால் தகுந்த நேரத்தில் தகவலை அளித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டனர்.இருப்பினும், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் இணை பொது இயக்குனர் லலித் குப்தாவிற்கு வந்த அனாமதேயத் தகவல் மூலம்தான் இந்த செய்தி வெளித்தெரிந்துள்ளது.

விமானப் பயணத்தின் பாதுகாப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ள லலித் குப்தாவிடம் அன்று மாலையே ஜெட் ஏர்வேஸ் இந்த நிகழ்வினை உறுதி செய்தது. மறுநாள் விமானிகள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது விமானி அனுமதிக்கப்பட்ட ஓய்வில் இருந்ததாகவும், அப்போது துணை விமானி விமானக் குறிப்புகள் அடங்கிய கணினித்தளத்தில் பிசியாக இருந்ததால் விமானத்தின் உயரம் குறைந்ததைக் கவனிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தீவிரமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த சம்பவத்தின்போது இருவருமே தூங்கியிருக்கக்கூடும் என்ற அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக இந்த இரு விமானிகளும் பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies