இந்திய அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் சைன்ஸ் என்ற ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் உலகின் டாப் பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஒரே கல்வி நிறுவனம் . இந்த பட்டியலில் அமெரிக்க பல்கலைக்கழகங்களே அதிக அளவில் இருக்கிறது .
பெங்களூரில் உள்ள இந்த பல்கலைக்கழக ஜாம்ஷெஜி டாட்டா அவர்களின் உதவியால் தொடங்கப்பட்டது . இது ஒரு ஆய்வு நிறுவனமாக இருக்கிறது . இதனை டாட்டா பல்கலைக்கழகம் என்றும் அழைப்பர் . இந்த நிறுவனம் டாப் பல்கலைக்கழக பட்டியலில் 301-401 ரேங்கிங்க் பிரிவில் இடம் பெற்றுள்ளது . தனிப் பிரிவில் என்று பார்த்தால் இயற்கை மற்றும் கணிதம் பிரிவில் இந்த பல்கலைக்கழகம் 151-201 ரேங்கிங்க் பிரிவில் இடம் பெற்றுள்ளது .
பாடப் பிரிவுகள் என்று தனியேப் பார்த்தால் , கணினி அறிவியல் பாடப் பிரிவில் , இந்திய புள்ளியியல் நிறுவனம் 101-150 ரேங்கிங்க் பிரிவில் இடம் பிடித்தது .
டாப் 3 பல்கலைக்கழகம் :
- ஹார்வர்ட் யுனிவர்சிட்டி
- ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி
- எம்.ஐ.டி