சுவீடனில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டதட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு போலீசார் கூறுகையில், "பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை. சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் குற்றவாளி என்று சந்தேகிக்கிறோம்.
இந்தத் துப்பாக்கிச் சூடு ஏன் நடந்தது, பள்ளிக்கு உள்ளே நடந்ததா, வெளியே நடந்ததா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை" என்று பேசியுள்ளனர்.

யார், யார் இறந்துள்ளனர் என்ற தகவல்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இருவர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "துப்பாக்கிச் சூடு குறித்து மாணவர்கள் எங்களிடம் ஓடிவந்து கூறினார்கள். பின்னர், துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நாங்கள் வெளியே செல்லவில்லை. ஆரம்பத்தில் அதிகம் கேட்ட துப்பாக்கிச் சத்தம் பின்னர் அமைதியானது. மீண்டும் அரை மணிநேரத்திற்குப் பிறகுத் தொடங்கியது. நாங்கள் டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டிருந்தோம்" என்று பேசியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய சுவீடன் பிரதமர், "இது நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு. இந்த சம்பவம் குறித்துப் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நானும் அவற்றுக்குப் பதில் கூற முடியாது. ஆனால், இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என நிச்சயம் தெரியவரும்" என்று கூறியுள்ளார்.
கொலையாளிக்கு 35 வயது இருக்கலாம். அவரிடம் ஆயுத லைசன்ஸ் உள்ளது. இதுவரை அவர் மீது எந்த குற்றங்களும் பதியப்படவில்லை. அவர் வீட்டை போலீசார் சோதனையிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs