BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 6 January 2025

Earthquake: நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம்; பீகார், அஸ்ஸாமிலும் உணரப்பட்ட தாக்கம்

2025-ம் ஆண்டு தொடங்கிய 7 வது நாளில் இந்தியாவின் அண்டை நாடானா நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) படி, நிலநடுக்கம் இன்று காலை 6:35 மணிக்கு, நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பலப் பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது.

நேபாள நிலநடுக்கம் - 2025

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பீகாரின் சிலப் பகுதிகளில் மக்கள் சாலையில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதுவரை சேதாரங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை. பொதுவாகவே, நேபாளம் புவியியல் ரீதியாக வேகமாக இயங்கும் பகுதியாகும். இந்திய - யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் மோதியதால்தான் இமயமலையே உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies