டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபராக வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 47-வது அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். மேலும், அமெரிக்காவின் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ``கோவிட் தடுப்பூசி உத்தரவை ஏற்க மறுத்ததால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் இந்த வாரம் முழு ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன்.
மேலும், எங்களின் ராணுவ வீரர்கள் தங்களின் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தீவிர அரசியல் கோட்பாடுகள் மற்றும் சமூக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க நான் ஒரு உத்தரவில் கையெழுத்திடுவேன்." என்று கூறினார்.
இவற்றுக்கு மேலாக ட்ரம்ப், ``இன்றைய நிலவரப்படி, ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்." என்று கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார். மேலும், இவரின் இத்தகைய பேச்சு மூன்றாம் பாலினத்தார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal