பிக் பாஸ் சீசன் 8 கடைசி கட்டத்தை எட்டிவிட்டது.
ஆட்டம் சூடிபிடிக்க எவிக்ஷனும் பரபரப்பாகியிருக்கிறது. கடந்த வாரம் வெளியேறியிருந்த ஜெஃப்ரியை சந்தித்துப் பேசினோம்.
நம்மிடம் பேச தொடங்கிய அவர், ``வெளில நல்ல வரவேற்பு இருக்கு. அறிமுகமில்லாத மனிதர்கள் பலரும் வந்து என்கிட்ட பேசுறாங்க. நேத்துகூட ஒரு அக்கா என்கிட்ட அழுதுட்டே பேசினாங்க. `உங்க கேம் நல்லா இருந்தது. உங்களை நான் ரசிச்சுப் பார்த்தேன். நீங்க எப்படி வெளில வந்தீங்க'னு சொன்னாங்க. அறிமுகமில்லாதவர்கள் இப்படியான விஷயங்களை சொல்லும்போது நம்ம சரியாகதான் விளையாடியிருக்கோம்னு திருப்தி இருக்கு.
நான் சமுக வலைதளப் பக்கங்கள்ல வர்ற கமெண்ட்ஸை பார்க்கவே இல்ல. நான் வீட்டுக்குள்ள யாருக்கும் செல்லமாக இல்லை. வெளில இருந்து பார்க்கும்போது உங்களுக்கு அப்படி தெரிஞ்சிருக்கும். ஆனால், நான் வீட்டுக்குள்ள அப்படி இல்லை. எல்லோரும் பண்ற தப்பை நான் அவங்ககிட்டையே சொல்லிட்டுதான் இருந்தேன். நான் வீக்கானதுதான் எவிக்ஷனுக்கு காரணம்னு நினைக்கிறேன். டாஸ்க் மேல அதிகமாக கவனம் செலுத்தினதுனால நான் என்டர்டெயின் பண்ணாமல் விட்டுடேன். வீட்டுக்குள்ள இன்னும் அதிகமாக பாடல்களை பாடியிருக்கலாம்னு இப்போ தோனுது. அன்ஷித்தாவோட எவிக்ஷனுக்கு அவங்க பாசமாக இருந்தது ஒரு காரணமாக சொல்ல முடியாது.
அவங்க டாஸ்க் சிலவற்றை சரியாக பண்ணாத விஷயத்தை காரணமாக சொல்லலாம். நான் வீட்டுக்குள்ள இருந்திருந்தால் `டிக்கெட் டு ஃபைனாலே' ஜெயிச்சிருப்பேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. பவித்ராவும் டிக்கெட் டு ஃபைனாலேவுக்கு தகுதியானவங்கதான். அவங்க டாஸ்க் சரியாக பண்ணாத மாதிரி வெளிய இருந்து பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். ஆனால், மனதளவிலும் உடலளவிலும் ரொம்ப வலிமையானவங்க பவித்ரா." என்றவர், " இப்போ நியூ இயரை சத்யா, அன்ஷிதா, ஆனந்தியோட கொண்டாடியிருந்தேன். உள்ள இருந்த மாதிரியே வெளிலையும் அவங்களோட நட்பு தொடர்ந்திருக்கு. " என்றவரிடம் நேற்றைய பிரேகிங் ப்ரோமோவை காண்பித்து இனி வரும் ஆட்டம் குறித்து கேட்டோம்.
அவர், ` நான் உள்ள போனால் ஆட்டம் எப்படி இருக்கும்னு தெரியும்(சிரித்துக் கொண்டே). " என்றவர் செளதர்யா - பி.ஆர் வேலைகள் பற்றிய விவாதம் குறித்து, `` டாஸ்க் அடிப்படையில செளந்தர்யா தகுதியானவங்க கிடையாது. அவங்க டாஸ்க் எதுவுமே பெருசா பண்ணல. நான் வீட்டுக்குள்ள இருக்கும்போது கோவா கேங்ல இருந்திருக்ககூடாதுனு ஃபீல் பண்ணியிருக்கேன். அந்த கேங் கேம்மை கெடுக்கிற மாதிரி இருந்தது” என்றார். மேலும் பேசிய ஜெஃப்ரி, ''ரானவ் கீழ விழுந்த சமயத்துல அவன் நடிக்கிறான்னு நான் சொல்லியிருக்கக்கூடாது. ஃபைனல் கட்டதுக்கு தீபக், பவித்ரா, அருண், செளந்தர்யா போவாங்க. என்னுடைய கணிப்புல பவித்ரா டைட்டில் அடிப்பாங்க." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
கீழே உள்ள வீடியோவில் முழுமையான பேட்டியை காணலாம்...!