BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 27 December 2024

What to watch on Theatre & OTT: திரு.மாணிக்கம், அலங்கு, ராஜாகிளி; இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

திரு.மாணிக்கம் (தமிழ்)

திரு.மாணிக்கம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. இந்த டிஜிட்டல் காலத்தில் வெள்ளந்தியாக நேர்மையாக இருக்கும் ஒருவர் என்னவெல்லாம் பிரச்னைகளைச் சந்திக்கிறார். குடும்பமும், சமுதாயமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அலங்கு (தமிழ்)

அலங்கு

எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அலங்கு'. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பையும், அதனை மையமாக வைத்து வரும் பிரச்னையையும் பற்றி பேசும் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Smile Man (தமிழ்)

The Smile Man

ஷியாம் - பிரவீன் இயக்கத்தில் சரத்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் சந்திரா, இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Smile Man'. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராஜாகிளி (தமிழ்)

ராஜாகிளி

உமாபதி ராமய்யா இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இது. பிரபல தொழிலதிபராக இருக்கும் தம்பி ராமய்யா, பெண் ஆசையால் சரிந்து, வீழும் கதை இது. வாழ்க்கைத் தத்துவத்தை சுவாரஸ்யக் கதையுடன் சொல்லும் இத்திரைப்படம் நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மழையில் நனைகிறேன் (தமிழ்)

மழையில் நனைகிறேன்

சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால், ரெபா மோனிகா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மழையில் நனைகிறேன்'. காதல், ரொமாண்டிக் கதையான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Max (கன்னடம், தெலுங்கு, தமிழ்)

Max

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், வரலஷ்மி சரத்குமார், சமியுக்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Max'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Barroz (மலையாளம், தமிழ், தெலுங்கு)

Barroz

பரோஸ் பூதமாக மாற்றப்பட்டு 400 ஆண்டுகளாக பொக்கிஷங்களைப் பாதுகாக்க வைக்கப்படுகிறார். மீண்டும் அதற்குச் சொந்தமான  டி காமாவின் அடுத்த தலைமுறையினர் வந்து அந்த பொக்கிஷங்களைப் பெற்றுக் கொண்டார்களா, பரோஸுக்கு விமோசனம் கிடைத்ததா என்பதுதான் மோகன் லால் முதல்முறையாக இயக்குநராகக் களமிறங்கியிருக்கும் இந்த 3டி ஃபேண்டஸி திரைப்படத்தின் கதை. சாகச, பேண்டஸி திரைப்படமான இது கிறிஸ்துமஸ் அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Barroz Review: 'இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..' - இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா?

Srikakulam Sherlockholmes (தெலுங்கு)

Srikakulam Sherlockholmes

மோகன் இயக்கத்தில் சியா கெளதம், கிஷோர், ரவி தேஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Srikakulam Sherlockholmes'. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Baby John (இந்தி)

Baby John

காளீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baby John'. அட்லியின் 'தெறி' படத்தின் ரீமேக்கான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ்கள்

RRR (Behind and Beyond) - Netflix

Doctors (இந்தி) - Jio Cinema - Dec 27

Khoj - Parchaiyon Ke Uss Paar (இந்தி) - Zee5

What If...?: S3 (ஆங்கிலம்) - Disney + Hotstar

Squid Game: S2 (ஆங்கிலம்) - Netflix

தியேட்டர் டு ஓடிடி

Sorgavaasal (Tamil) - Netflix

White Rose (Tamil) - Aha

Thaanara (Malayalam) - Amazon Prime Video

Panchayat Jetty (Malayalam) - manorama MAX

Bhairathi Ranagal (Kannada) - Amazon Prime Video

சொர்க்கவாசல்

Rahasyam Idham Jagath (Telugu) - Etv WIN

Singham Again (Hindi) Prime

Bhool Bhulaiyaa 3 (Hindi) Netflix

Never Let Go (English) - Amazon Prime Video

The Roundup: Punishment (Korean) Amazon Prime Video



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies