சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அதாவது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தை பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரித்து இருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக வெளியுறவுத்துறை ஜெயசங்கர் பேசியிருக்கிறார்.
அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரிக்ஸ் நாடுகளுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு உள்ளது. முதல் முறை டிரம்ப் ஆட்சி நடந்த போதும் அவர்களுடன் எங்களுக்கு மிகவும் உறுதியான உறவு இருந்தது. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படி நாங்கள் எதையும் ஆலோசனை செய்யவில்லை.
பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்கிறது. டாலரை எதிர்க்க அல்லது துறக்க இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இப்போது பிரிக்ஸ் நாணயம் வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook