சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு எபிசோடுகளில், கல்யாண மண்டபத்துக்கு மீனா எடுத்த முதல் ஆர்டரை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார். கல்யாண மண்டபத்தின் மேலாளர் மீனாவைப் பாராட்டி அவரின் கட்டணத்தைக் கொடுக்கிறார். மீனா மகிழ்ச்சியுடன் மண்டபத்தின் உதவியாளர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறார்.
அந்த சமயத்தில் மண்டபங்களில் அலங்காரம் செய்யும் ஒப்பந்தம் எடுத்து நடத்தும் பெண் தொழிலதிபர் அங்கு வருகிறார். வழக்கமாக அந்த பகுதியில் அவர் தான் அலங்கார ஒப்பந்தங்களை எடுப்பார்.
இம்முறை மீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால், கோபத்தோடு மீனாவைப் பார்க்கிறார். மண்டப மேலாளரிடமும் சொல்லி மிரட்டுகிறார். மீனாவுக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாமல் கிளம்புகிறார்.
முத்து மனமுடைந்து போகிறார். ஏற்கனவே வீட்டில் அவர் குறைவாகச் சம்பாதிப்பதாக விஜயாவும், மனோஜும் சொல்லிக் காட்டுவது வழக்கம். தற்போது மீனாவும் அப்படிச் சொன்னதால் முத்து மிகவும் வருத்தமடைகிறார். மீனாவிடம் சொல்லாமல் மறு நாள் காலை வீட்டிலிருந்து கிளம்புகிறார்.
மீனா பேசியது, முத்துவின் ஈகோவை பாதித்துவிட்டது. முத்து எங்குச் சென்றார் என்று தெரியாமல் மீனா தவிக்கிறார். முத்துவின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃபில் இருக்கிறது. மீனாவும் சத்யாவும் சேர்ந்து முத்துவைத் தேடுகின்றனர்.
இதனிடையே மனோஜ்-ரோகிணி 3 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ள அந்த இசிஆர் வீடு ஒரு மோசடி என்பது தெரிய வந்துள்ளது. அந்த வீட்டில் வாடகை இருக்கும் கணவன் - மனைவி மோசடி பேர்வழி. மனோஜை ஏமாற்றி முதலில் ஒரு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்கின்றனர். அதன் பிறகு லோன் மூலம் மீதமுள்ள பணத்தைக் கொடுக்க ஆவணங்கள் கொடுத்து உதவுவதாக உறுதியளிக்கின்றனர். இதனை அப்படியே நம்பும் மனோஜ் பணத்தை ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறார்.
அவர்கள் ஏமாற்றப்படுவார்களா அல்லது முத்து அவர்களைக் காப்பாற்றுவாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும். முத்து-மீனா இடையே இருக்கும் பிரச்னை, மனோஜின் முன்னாள் காதலியின் வரவு, கிருஷின் பள்ளி, முத்துவின் மொபைல் போன் செருப்பு தைக்கும் பெரியவர்களிடம் இருப்பது எனp பல பிரச்னைகள் வரிசைக் கட்டி நிற்கிறது. அடுத்து வரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகரும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras